[kanchilug] 1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

  • From: Shrinivasan T <tshrinivasan@xxxxxxxxx>
  • To: Mailing list for discussions about Tamil wikisource / தமிழ் விக்கிமூலம் <tawikisource@xxxxxxxxxxxxxxxxxxx>, kanchilug@xxxxxxxxxxxxx
  • Date: Tue, 19 Feb 2019 22:32:08 +0530

கணியம் அறக்கட்டளை

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின்
பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,
 வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி
இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது
வரை

   - Kaniyam.com <http://kaniyam.com>  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற
   மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு
   வருகின்றன.
   - FreeTamilEbooks.com <http://freetamilebooks.com> தளத்தில் 5.5
   ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு
   நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில்
   ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
   - ta.wikisource.org தளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000
   க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக
   மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்குத் தேவையான பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப் பட்டு, கட்டற்ற
மென்பொருட்களாக (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.

தன்னார்வலர்களே  இத்தகு முயற்சிகளுக்கு பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து
வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்கு சிறந்த வெளியை
ஏற்படுத்தி தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன்,
நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.


மாணவர் பதிப்பகம்

சென்னையில் உள்ள மாணவர் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத,
அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின
மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப்
பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர்.

அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத்
தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார்,
மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க,
இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி. கந்தையா,
மறைமலையடிகள், வ.சுப. மாணிக்கனார், அப்பாத்துரையார் ஆகியோரின் எல்லாப்
படைப்புகளும்  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல்வேறு பழந்தமிழ் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கருணாமிர்த சாகரம்
போன்ற இசை நூல்கள், பண்டைய தமிழ் இலக்கிய நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.


*நூல் பட்டியல்*

   1. பாவேந்தர் பாரதிதாசன் – 167 நூல்கள்
   2. கா. அப்பாத்துரையார் – 98 நூல்கள்
   3. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 80 நூல்கள்
   4. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 76 நூல்கள்
   5. ந.சி.க. நூல் திரட்டு – 65 நூல்கள்
   6. திரு.வி.க. தமிழ்க்கொடை – 54 நூல்கள்
   7. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் – 53 நூல்கள்
   8. மறைமலை அடிகள் – 52 நூல்கள்
   9. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 37 நூல்கள்
   10. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 39 நூல்கள்
   11. மாணிக்க விழுமியங்கள் – 34 நூல்கள்
   12. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் – 32 நூல்கள்
   13. ஔவை துரைசாமி உரைவேந்தர் தமிழ்த்தொகை – 32 நூல்கள்
   14. புலவர் குழந்தை படைப்புகள் – 28 நூல்கள்
   15. சங்க இலக்கியக் களஞ்சியம் – 22 நூல்கள்
   16. கவியரசர் முடியரசன் படைப்புகள் – 22 நூல்கள்
   17. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை – 21 நூல்கள்
   18. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 20 நூல்கள்
   19. தொல்காப்பிய உரைத்தொகை – 19
   20. பதினெண் கீழ்க்கணக்கு – 18 நூல்கள்
   21. தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) – 18 நூல்கள்
   22. இராகவன் நூற்களஞ்சியம் – 16 நூல்கள்
   23. சதாசிவப் பண்டாரத்தார் – 16 நூல்கள்
   24. தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 நூல்கள்
   25. செவ்விலக்கிய கருவூலங்கள் -15 நூல்கள்
   26. தேவநேயப் பாவாணர் – 13 நூல்கள்
   27. தமிழக வரலாற்று வரிசை – 12 நூல்கள்
   28. நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 10 நூல்கள்
   29. செம்மொழிச் செம்மல்கள் – 10 நூல்கள்
   30. பி. இராமநாதன் – 10 நூல்கள்
   31. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – 10 நூல்கள்
   32. கருணாமிர்த சாகரம் -7 நூல்கள்
   33. ஐம்பெருங் காப்பியங்கள் – 5 நூல்கள்
   34. முதுமொழிக் களஞ்சியம் – 5 நூல்கள்
   35. சுப்புரெட்டியார் – 3 நூல்கள்
   36. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி – 3 நூல்கள்
   37. உவமைவழி அறநெறி விளக்கம் – 3 நூல்கள்
   38. யாழ்ப்பாண அகராதி -2 நூல்கள்
   39. ந.சி. கந்தையா அகராதிகள் – 2 நூல்கள்
   40. நீதி நூல்கள் – 2 நூல்கள்
   41. குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) – 1 நூல்

மொத்த பக்கங்கள் – 2 இலட்சத்துக்கு மேல்

மொத்த நூல்கள் – 1,165


நாட்டுடைமை நூல்களை மின்னூல்களாக வெளியிடுதல்

தமிழ் இணையக் கல்விக் கழகம் நாட்டுடைமை நூல்களை PDF கோப்புகளாக
வெளியிட்டுள்ளது. அவற்றை விக்கி மூலம் பங்களிப்பாளர்கள், OCR கருவி மூலம்
எழுத்துகளாக மாற்றி, அதில் ஏற்பட்ட பிழைகளைக் களைந்து வருகின்றனர்.

கடும் மனித உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி இது. இப்போதுள்ள சுமார் 2000
மின்னூல்களைப் பிழைத்திருத்தம் செய்து உரை வடிவில் வெளியிட சில பத்தாண்டுகள்
ஆகலாம்.

இந்நிலையில், நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம்,
அவற்றை உரை வடிவிலும் வைத்திருக்கக் கூடும் என்றெண்ணி, அவர்களிடம் இது பற்றி
உரையாடினோம். அவர்களது பதிப்புகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்துருவில் வேர்ட்
ஆவணங்களாகவே இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தோம்.

விக்கிமூலத்தில் proof read பணிகள் பற்றியும், கணியம் அறக்கட்டளை,
FreeTamilEbooks.com <http://freetamilebooks.com> வெளியீடுகள் பற்றியும்
அவர்களுக்கு எடுத்துரைத்தோம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் அனைவருக்கும்
இலவசமாகவே மின்னூல்களை தருவது அறிந்து மகிழ்ந்து வாழ்த்தினர்.

தம்மிடம் உள்ள 1000க்கும் மேற்பட்ட மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல்
பக்கங்கள்] ஒருங்குறியில் உள்ள வேர்டு ஆவணங்களை, கணியம் அறக்கட்டளை இலவசமாக
வெளியிடுவதற்கு தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக
வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய
நிலை உருவாகும்.

மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கும், 1000 க்கும் மேற்பட்ட நூல்களை pdf
ஆக அல்லாமல் ஒருங்குறி வடிவில் தருவதற்கும், அதற்கான தட்டச்சு செலவின் ஒரு
பகுதியையாவது தருவதாக உறுதி கூறினோம்.

இதற்கான நன்கொடையாக *ரூபாய் 5 லட்சம்* அளிப்பதாக இசைந்தோம். நாம் ஒரு
பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாக செய்கிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச்
சிறிய தொகை [2.5 ரூபாய் /பக்கம்].

கணியம் அறக்கட்டளையின் பணிகள் யாவும் தன்னார்வலர்களாலும், வாசகர்களின்
நன்கொடைகளாலும் மட்டுமே நடப்பதை விவரித்து, இரண்டு மாத கால அவகாசம்
கேட்டுள்ளோம்.

அவர்களிடமிருந்து நூல்களைப் பெற்ற பின், அவற்றுக்கு அட்டைப்படம் சேர்த்து,
விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்கிமூலம் தளத்திலும் (
https://ta.wikisource.org), கூடவே கிண்டில், கைபேசி, கணினி என அனைத்து
மின்னணுக் கருவிகளிலும் படிக்கும் வகையில், epub, mobi, A4 PDF, 6 inch PDF
ஆகிய வடிவங்களில் FreeTamilEbooks.com இலும், வெளியிடுவோம்.


நன்கொடை வேண்டுகோள்

*இரண்டு மாதங்களில் ரூபாய் 5 லட்சம் நன்கொடை பெறுதல்* என்பது பெரும் பணி தான்.
ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியை
கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை
எட்ட பேருதவி புரியும்.

தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள்
அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.


வெளிப்படைத்தன்மை

   - கணியம் அறக்கட்டளையின் செயல்கள், நன்கொடைகள், செலவுகள் யாவும் kaniyam.com
   தளத்தில் அறிக்கையாக <http://www.kaniyam.com/category/monthly-reports/>
   பகிரப்படுகின்றன.
   - புதிய திட்டங்கள் யாவும் இங்கே
   https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues
   விவாதிக்கப்படுகின்றன.
   - இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன.
   
docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing


*வங்கி விவரங்கள்*

Kaniyam Foundation

Account Number : 606 1010 100 502 79

Union Bank Of India

West Tambaram, Chennai

IFSC – UBIN0560618



நன்கொடை விவரங்களை kaniyamfoundation@xxxxxxxxx க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


தொடர்புக்கு



த. சீனிவாசன் – 9841795468

அன்வர் – 8124782351 (வாட்சப் எண்)

kaniyamfoundation@xxxxxxxxx




-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com


-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

Other related posts:

  • » [kanchilug] 1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல் - Shrinivasan T